'தி ரா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்: நாளை வெளியிடுகிறார் சமுத்திரக்கனி!

'தி ரா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்: நாளை வெளியிடுகிறார் சமுத்திரக்கனி!

நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி நாளை மாலை 5 மணிக்கு 'தி ரா' (The Raw) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிடவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பு தரப்பு மற்றும் பிஆர்ஓ டைமண்ட் பாபு உறுதிப்படுத்தியுள்ளனர். வினோத் மோகன் மற்றும் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மாறுபட்ட கதைக் களத்தில் உருவாகும் இத்திரைப்படம் திரையுலக வட்டாரத்தில் தொடக்கத்திலிருந்தே நல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது. நாளை மாலை சமுத்திரக்கனியின் சமூக வலைத்தள பக்கங்களின் வாயிலாக இந்த மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளதால், படத்தின் போஸ்டர் பார்வை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்