ராஜப்பாவிற்கு தேர்தலே கிடையாது: சமுத்திரக்கனியின் மிரட்டலான வில்லன் லுக் வெளியீடு!
நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் மாச்சர்ல நியோஜகவர்கம் திரைப்படத்தில், பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியின் வில்லன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராஜப்பா என்ற சக்திவாய்ந்த எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி மிரட்டலாகத் தோன்றுகிறார். ராஜப்பாவிற்கு தேர்தலே கிடையாது, அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற மாஸ் வசனத்துடன் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான மாவட்ட ஆட்சியராக நடிக்கும் நிதினுக்கும் சமுத்திரக்கனிக்கும் இடையிலான அரசியல் மோதல் திரைக்கதையின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும். எம்.எஸ். ராஜசேகர் ரெட்டி இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 12 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கிருத்தி ஷெட்டி மற்றும் கேத்ரின் தெரசா நடித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனியின் இந்த வில்லன் அவதாரம் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
· Sreshthmovies