லியோ அந்தோணி தாஸ் சஞ்சய் தத்: பிறந்தநாள் சர்ப்ரைஸாக மிரட்டல் வீடியோ வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

லியோ அந்தோணி தாஸ் சஞ்சய் தத்: பிறந்தநாள் சர்ப்ரைஸாக மிரட்டல் வீடியோ வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

பாலிவுட் நட்சத்திர நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி லியோ படத்தில் அவரது கதாபாத்திரமான 'அந்தோணி தாஸ்' கிளிம்ப்ஸ் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான தருணம் என்றும் லோகேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். வெளியான கிளிம்ப்ஸில் வாயில் எரியும் சிகரெட், தாடி மீசையுடன் தீவிரமான மாஸ் வில்லன் தோற்றத்தில் சஞ்சய் தத் திரையை அதிர வைக்கிறார். அனிருத்தின் ரத்தத்தை உறையவைக்கும் பின்னணி இசை இந்த வீடியோவிற்கு கூடுதல் மிரட்டலான பலத்தை சேர்த்துள்ளது. இந்த சிறிய வீடியோவே சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. தளபதி விஜய் மற்றும் சஞ்சய் தத் நேருக்கு நேர் மோதும் அனல் பறக்கும் மோதல் காட்சிகளை திரையில் காண இந்திய சினிமா ரசிகர்களே ஆவலுடன் காத்திருக்கின்றனர். அக்டோபர் 19 அன்று வெளியாகவுள்ள லியோவில் இவர்களின் மோதல் பிரதான ஈர்ப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

· Dir_lokesh

பழைய செய்திகள்