சந்தானம் மற்றும் அபர்ணா தாஸ் நடிக்கும் லவ் பைட்: டிசம்பரில் திரைக்கு வரும் நகைச்சுவை விருந்து

சந்தானம் மற்றும் அபர்ணா தாஸ் நடிக்கும் லவ் பைட்: டிசம்பரில் திரைக்கு வரும் நகைச்சுவை விருந்து

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சந்தானம் மற்றும் அபர்ணா தாஸ் ஜோடியாக நடித்துள்ள 'லவ் பைட்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் இனிப்பான வாழ்த்து போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை மற்றும் பாண்டியராஜன் உள்ளிட்ட மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே இணைந்துள்ளது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து கலகலப்பான காதல் கதையாக இது படமாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு ரசித்துச் சிரிக்கும் விதமாக உருவாகியுள்ள லவ் பைட் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. டிசம்பர் மாத விடுமுறையைக் குறிவைத்து களமிறங்கும் சந்தானத்தின் நகைச்சுவை கலாட்டா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்