சந்தானத்தின் அடுத்த படம் ‘அதிசய பிறவி’: டைம் லூப் பாணியில் வெளியான கலக்கல் ஃபர்ஸ்ட் லுக்!
காமெடி நாயகன் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘அதிசய பிறவி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் போஸ்டர்களுடன் உற்சாகமாக அறிவித்துள்ளனர். வீனஸ் இன்போடெயின்மென்ட் மற்றும் கே7 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. சுதாமன் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் சந்தானத்துடன் வெற்றி, ஸ்மிருதி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஒரு லூப், எண்ணற்ற சாத்தியங்கள்’ என்ற சுவாரசியமான குறிப்புடன் வெளியான போஸ்டர், இது வழக்கமான நகைச்சுவைப் படமாக இல்லாமல் டைம் லூப் பாணியிலான பேண்டஸி நகைச்சுவைப் படமாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. சந்தானத்தின் கலகலப்பான டைமிங் காமெடியுடன் காலப் பயணத்தின் விசித்திரக் குழப்பங்களும் சேரும்போது தியேட்டர்களில் கலகலப்புக்கு உத்தரவாதம் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டீசர் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
· Actor Kayal Devaraj