சந்தானம் நடிக்கும் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு: டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்!

சந்தானம் நடிக்கும் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு: டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை மற்றும் முன்னணி நடிகர் சந்தானம் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 'லவ் பைட்' (Love Bite) திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகும் இந்த முழுநீள பொழுதுபோக்கு நகைச்சுவைத் திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, நிரோஷா உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முழுமையான நகைச்சுவை விருந்தாக தயாராகியுள்ள 'லவ் பைட்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்