ஜாம்பிகளுடன் மல்லுக்கட்டும் சந்தானம்: கலகலப்பான 'லவ்பைட்' கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஜாம்பிகளுடன் மல்லுக்கட்டும் சந்தானம்: கலகலப்பான 'லவ்பைட்' கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'லவ்பைட்' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் சுவாரசியமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜாம்பி பின்னணியில் நடக்கும் இந்த நகைச்சுவைக் களத்தின் போஸ்டரை சனிக்கிழமையன்று சந்தானம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சந்தானம் தீவிரமான ஜாம்பி தாக்குதலுக்கு நடுவே நகைச்சுவை அலப்பறைகளைச் செய்யும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். போஸ்டரில் பலவித கதாபாத்திரங்களின் வித்தியாசமான முகபாவனைகளும் குழப்பங்களும் இடம்பெற்று, இது ஒரு முழு நீள காமெடி விருந்தாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

· @xpresscinema

பழைய செய்திகள்