சந்தானத்தின் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு: டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்!
நடிகர் சந்தானம் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் நகைச்சுவைத் திரைப்படமான 'லவ் பைட்' (LoveBite) படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததை உற்சாகமாகக் கொண்டாடும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் மற்றும் பிஆர்ஓ டைமண்ட் பாபு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரிப்பில், அர்ச்சனா கல்பாத்தி மேற்பார்வையில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஆதித்யா கதிர் மற்றும் நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் கலகலப்பூட்ட இணைந்துள்ளனர். முழுநீள ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சந்தானத்தின் டைமிங் நகைச்சுவைக்கு ஏஜிஎஸ் பிரம்மாண்டம் கை கொடுப்பதால், ரசிகர்களுக்கு இந்த டிசம்பர் பக்கா ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Idiamondbabu