'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ரஜினியுடன் சந்தானம்: வைரலாகும் சுவாரசியமான பிடிஎஸ் வீடியோ!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்புத் தளத்தில் பிரபல நடிகர் சந்தானம் கலந்துகொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகை வித்யா பாலனுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேக் ஊட்டிவிடும் காட்சியில், படக்குழுவினருடன் சந்தானமும் நிற்பதை ரசிகர்கள் கூர்ந்து கவனித்துள்ளனர். இதனால் 'ஜெயிலர் 2' படத்தில் சந்தானம் ஒரு சுவாரசியமான கேமியோ வேடத்திலோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமாரின் டிரேட்மார்க் டார்க் காமெடி காட்சிகளில் சந்தானம் இணைந்தால் தியேட்டரில் சிரிப்பலைக்கு பஞ்சமிருக்காது என்பதால், இந்தத் தகவல் குறித்து படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· @xpresscinema