மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய சரிகம: கயல் தேவராஜ் பகிர்ந்த அப்டேட்
சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மேரேஜ் ஸ்டோரி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை வெளியீட்டு உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம குளோபல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகும் இப்படத்திற்கு தீபன் இசையமைக்கிறார். எஸ்பி சித்தார்த், ஷபானா ஷாஜகான், தீபிகா, வட்சன், அயாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளம் தலைமுறையினரைக் கவரும் அருமையான மெலடி மற்றும் துள்ளல் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பாடல்களின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் பாடல் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி ரீல் பெட்டி தயாரிப்பில் உருவாகும் மேரேஜ் ஸ்டோரி படத்தின் அடுத்தடுத்த சுவாரசியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj