முதல் நாளில் ரூ.70 கோடி வசூல்: உலக பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் தளபதியின் 'சர்க்கார்'!

முதல் நாளில் ரூ.70 கோடி வசூல்: உலக பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் தளபதியின் 'சர்க்கார்'!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்க்கார்' திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 70 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது என ஒன்லி கோலிவுட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்த இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாட்டுத் திரையரங்குகளிலும் சர்க்கார் படத்திற்கு வரலாறு காணாத ஓபனிங் கிடைத்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் அரசியல் விறுவிறுப்பும் விஜய்யின் கார்ப்பரேட் கிரிமினல் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. முதல் நாளே 70 கோடிகளைத் தொட்டுள்ளதால், வெறும் இரண்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் படம் மிக எளிதாக இணையும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். விடுமுறை தினங்கள் தொடர்வதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.

· Only Kollywood

பழைய செய்திகள்