சசிகுமாரின் புதிய படம்: அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்தார் அபிஷேக் ஸ்ரீனிவாஸ்!

சசிகுமாரின் புதிய படம்: அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்தார் அபிஷேக் ஸ்ரீனிவாஸ்!

நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22வது திரைப்படத்தில், அதிரடி சண்டைக் காட்சிகளை வடிவமைக்க இளம் ஸ்டண்ட் மாஸ்டர் அபிஷேக் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் மற்றும் எமோஷன் கலந்த கதைக்களங்களுக்கு பெயர் பெற்ற சசிகுமாரின் படங்களில் சண்டைக் காட்சிகள் எப்போதும் தத்ரூபமாக இருக்கும். அந்த வகையில், இப்படத்தில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை அமைக்க அபிஷேக் ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தை ஆர். ரவீந்திரன் மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்