சசிகுமார் நடிக்கும் புதிய மிஸ்ட்ரி படம்: கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் தமிழில் அறிமுகம்

சசிகுமார் நடிக்கும் புதிய மிஸ்ட்ரி படம்: கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் தமிழில் அறிமுகம்

கன்னடத் திரையுலகில் காலேஜ் குமார், விக்டரி 2 மற்றும் பை டூ லவ் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஹரி சந்தோஷ், தற்போது சசிகுமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இந்த 22வது தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிரான மர்மங்கள் நிறைந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகவுள்ளது. கிராமத்து மற்றும் குடும்பக் கதைகளில் முத்திரை பதித்த சசிகுமார், இந்த முறை ஒரு புதிரான வழக்கை துப்பறியும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் களமிறங்குவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. சிக்ஸ் டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் சேத்தன் தியோல்கர் மற்றும் சஞ்சய் விஜய் ராகவ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அடுத்தடுத்து அறிவிக்கவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்