சசிகுமார் மற்றும் நரேன் இணையும் புதிய படம்: டிரைடென்ட் ஆர்ட்ஸ் பூஜையுடன் இனிதே தொடக்கம்!

சசிகுமார் மற்றும் நரேன் இணையும் புதிய படம்: டிரைடென்ட் ஆர்ட்ஸ் பூஜையுடன் இனிதே தொடக்கம்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22வது திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆர்.ரவீந்திரன் மற்றும் சேத்தன் தியோல்கர் தயாரிப்பில் உருவாகும் இந்தப் பிரம்மாண்ட படத்தின் பூஜை வீடியோவை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் மற்றும் நரேன் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் நந்திதா ஸ்வேதா, சுவாசிகா, அஞ்சலி நாயர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். திறமையான நடிகர் பட்டாளம் இணைந்திருப்பதால் ஆரம்பத்திலிருந்தே இக்கூட்டணி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் ஆக்‌ஷன் கலந்த உணர்ச்சிகரமான கதையாக இது இருக்கும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூஜை முடிந்துள்ள நிலையில், முதல் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்