'குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் முழுமையான படம்': ராமின் 'ஏழு கடல் ஏழு மலை'யைப் பாராட்டிய சசிகுமார்!
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் தனது நெகிழ்ச்சியான பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள சசிகுமார், குழந்தைகள் முதல் குடும்பப் பார்வையாளர்கள் வரை அனைவரும் ரசித்து மகிழக்கூடிய ஒரு அழகான முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக 'ஏழு கடல் ஏழு மலை' உருவாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் உயிரோட்டமான இசை மற்றும் சுரேஷ் காமாட்சியின் தரமான தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் மனித அன்பின் எல்லைகளைப் பேசுகிறது. சினிமாவில் தனித்துவமான கலைப் படைப்புகளைத் தரும் இயக்குநர் ராமின் இயக்கத்தை சக படைப்பாளியான சசிகுமார் பாராட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைக் காணும் ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது. நல்ல சினிமாவை விரும்பும் குடும்பங்கள் தாராளமாக திரையரங்கிற்குச் சென்று இப்படத்தை ரசிக்கலாம் என சினிமா பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
· Actor Kayal Devaraj