சசிகுமாரின் 22வது திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் வெளியிட்ட அப்டேட்
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'புரொடக்ஷன் நம்பர் 22' படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக சஞ்சய் விஜயராகவன் இணைந்துள்ளார். இதனை நடிகர் கயல் தேவராஜ் மற்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஹரி சந்தோஷ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். கிராமத்து பின்னணி மற்றும் எமோஷனல் ஆக்ஷன் கதைகளில் சசிகுமாருக்கு தனித்துவமான இடம் உண்டு. அந்த வரிசையில் இந்த புதிய திரைப்படமும் குடும்பங்கள் கொண்டாடும் விறுவிறுப்பான கதையம்சத்துடன் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அடுத்தடுத்த விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
· Actor Kayal Devaraj