சசிகுமார் நடிக்கும் புதிய படம்: ஆடை வடிவமைப்பாளராக இணைந்தார் துர்கா பிரியா!
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22வது திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக துர்கா பிரியா ஒப்பந்தமாகியுள்ளார். கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து ஆடைகளை நேர்த்தியாக வடிவமைப்பதில் கவனம் பெற்ற துர்கா பிரியா, இப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான தோற்றங்களை உருவாக்கவுள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்குகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு சிக்ஸ் டைமென்ஷன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது. எதார்த்தமான கதையம்சமும் விறுவிறுப்பும் கலந்த படைப்பாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர முன்னணி நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
· Nikil Murukan