டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார்: ஹரி சந்தோஷ் இயக்கும் 22வது படம்!

டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார்: ஹரி சந்தோஷ் இயக்கும் 22வது படம்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22வது திரைப்படத்தில் முன்னணி நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கவுள்ளதாக பி.ஆர்.ஓ நிகில் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தின் விளம்பர பணிகளை லக்செரான் ஸ்டுடியோஸ் ஹரிஹரன் ஜே மேற்கொள்கிறார். மேலும் சிக்ஸ் டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் சேத்தன் தியோல்கர் மற்றும் சஞ்சய் விஜய் ராகவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். எதார்த்தமான கிராமத்து மற்றும் சமூகக் கதைக்களங்களில் தனி முத்திரை பதித்த சசிகுமார் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்ற உள்ளார். சசிகுமாரின் நடிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த இந்த திடீர் அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முழுமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும்.

· Nikil Murukan

பழைய செய்திகள்