‘அயோத்தி’ வெற்றிக்குப் பிறகு சசிகுமாருடன் மீண்டும் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்: 22-வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

‘அயோத்தி’ வெற்றிக்குப் பிறகு சசிகுமாருடன் மீண்டும் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்: 22-வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அயோத்தி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாருடன் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் 3-வது முறையாகக் கைகோர்த்துள்ளது. ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் புரொடக்‌ஷன் 22’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியுள்ளது என நிகில் முருகன் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை சிக்ஸ் டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் மற்றும் சேத்தன் தியோல்கர் இணைந்து தயாரிக்கின்றனர். சசிகுமாரின் யதார்த்தமான நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் உருக வைத்த நிலையில், அதே தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் அவர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விரிவான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

· Nikil Murukan

பழைய செய்திகள்