சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் 'பத்து நாள் ராஜா': இசை உரிமையைக் கைப்பற்றிய சரிகம சவுத்!

சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் 'பத்து நாள் ராஜா': இசை உரிமையைக் கைப்பற்றிய சரிகம சவுத்!

நடிகர் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் இணைந்து நடிக்கும் 'பத்து நாள் ராஜா' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான சரிகம சவுத் கைப்பற்றியுள்ளதாக பிஆர்ஓ நிக்கில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கிய குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சரண்யா ஆர். நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் இந்த படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் சிங்கம்புலி, சரவணன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்ஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் சரிகம சவுத் தளங்களில் வெளியாகவுள்ளன. சதீஷின் காமெடி கலாட்டாவும், ஆதி சாய்குமாரின் எனர்ஜியும் கலந்த இந்த பொழுதுபோக்கு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

· Nikil Murukan

பழைய செய்திகள்