சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் 'சூரியன் மறைந்த மாலை': யூடியூபில் வெளியாகி ரசிகர்களைக் கவரும் குறும்படம்!
பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும் 'சூரியன் மறைந்த மாலை' என்ற புதிய குறும்படம் தற்போது யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இக்குறும்படத்தை இளம் இயக்குனர் ஈஷ்வர் ஜி.கிரிஷ் மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். இக்கதையில் சச்சின் நாச்சியப்பன் மற்றும் நம்ரிதா முதன்மை கதாபாத்திரங்களில் தத்ரூபமாக நடித்துள்ளனர். மனித மனங்களின் மென்மையான உணர்வுகளையும் எதிர்பாராத வாழ்க்கைத் தருணங்களையும் நுட்பமாக பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.கே.ஆர் மனதை வருடும் வகையில் இசையமைத்துள்ளார். பிரகதீஷின் தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் அபிஷேக்கின் நேர்த்தியான படத்தொகுப்பு கதைக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. நல்ல கதையம்சம் கொண்ட குறும்படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற முன்னணி நிறுவனம் இளம் திறமையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்துள்ள இந்த முயற்சிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திரை ஆர்வலர்கள் இந்த படைப்பை தற்போது யூடியூப் தளத்தில் முழுமையாக கண்டு ரசித்து தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj