சத்யவான் சாவித்திரி படத்தின் சர்க்கரைப் பெண்ணே பாடல்: நவம்பர் 3ல் வெளியீடு

சத்யவான் சாவித்திரி படத்தின் சர்க்கரைப் பெண்ணே பாடல்: நவம்பர் 3ல் வெளியீடு

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சத்யவான் சாவித்திரி திரைப்படத்தின் இரண்டாவது தனிப்பாடலான சர்க்கரைப் பெண்ணே வரும் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பாடல் தமிழில் சர்க்கரைப் பெண்ணே எனவும், தெலுங்கில் சர்க்கரைப் பில்லா எனவும் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இயக்குநர் மிஷ்கின் மற்றும் பிரவீன் எஸ் விஜய் கூட்டணியில் டிரமஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இப்படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகி வருகிறது. சத்யவான் சாவித்திரி திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் பாடல்கள் படத்தின் மீதான ஈர்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்