கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பரிசு: 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் டீசர் வெளியானது

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பரிசு: 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் டீசர் வெளியானது

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டீசர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமைந்துள்ள இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிஷ்கின் மேற்பார்வையில் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. குடும்பப் பின்னணி, நெகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பதை டீசர் வெளிப்படுத்துகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்புத் திறனுக்கு இத்திரைப்படம் மற்றொரு சிறந்த களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. பிறந்தநாள் வாழ்த்துகளுடன் வெளியான இந்த டீசர் கீர்த்தி சுரேஷின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்