ஒரு பெண்... ஒரு வழக்கு... அனல் பறக்கும் வாதம்: இன்று வெளியாகும் 'சத்யவான் சாவித்திரி' ட்ரெய்லர்!

ஒரு பெண்... ஒரு வழக்கு... அனல் பறக்கும் வாதம்: இன்று வெளியாகும் 'சத்யவான் சாவித்திரி' ட்ரெய்லர்!

நீதிமன்றப் பின்னணியில் அனல் பறக்கும் வழக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் இன்று வெளியாகிறது என்று பி.ஆர்.ஓ டயமண்ட் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் மீது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், பாலா, விஜி, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சாம் சி.எஸ் தனது அதிரடியான பின்னணி இசையால் காட்சிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டியுள்ளார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர், படத்தின் ஆழமான நீதிமன்ற வாதங்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 'சத்யவான் சாவித்திரி' வெளியாகிறது. வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வரிசையில் கீர்த்தி சுரேஷின் இந்த புதிய படைப்பு நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்று சினிமா பிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்