சிறந்த ஹரியான்வி படத்திற்கான தேசிய விருது: இயக்குனர் சதீஷ் கௌஷிக்குக்கு பென் ஸ்டுடியோஸ் வாழ்த்து!
தேசிய திரைப்பட விருதுகளில் ஹரியான்வி மொழியின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற மறைந்த புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் சதீஷ் கௌஷிக்குக்கு பென் ஸ்டுடியோஸ் தலைவர் டாக்டர் ஜெயந்திலால் கடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் சமத்துவத்தையும் விளையாட்டு சாதனைகளையும் மையமாகக் கொண்டு உருவான 'சோரியான் சோரோன் சே கம் நஹி ஹோதி' என்ற திரைப்படத்திற்கு இந்த உயரிய தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் ஒரு சமூகக் கதையை வலிமையுடன் திரையில் கொண்டு வந்ததற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. சதீஷ் கௌஷிக்கின் கலைப் பயணத்தில் இந்த தேசிய விருது ஒரு சிறந்த பெருமையாக அமைந்துள்ளது என்று சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
· Jayantilalgada