இணையத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சீன்' படப் பாடல்: ஆத்தி இவ யாரா அதிரடி சாதனை!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் 'சீன்' திரைப்படத்தின் 'ஆத்தி இவ யாரா' (தமிழ்) மற்றும் 'அம்மோ இதி எவர்ரா' (தெலுங்கு) பாடல்கள் இணைந்து 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளதாக ஜகரம் ஸ்டுடியோஸ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. 'ஆவேஷம்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இத்திரைப்படத்தில் நஸ்லேன் மற்றும் நஸ்ரியா ஃபஹத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவான இப்பாடலின் அதிரடி தாளமும், நடிகர்களின் துள்ளலான நடனமும் இளைஞர்கள் மத்தியில் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று ரீல்ஸ்களில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் கவனம் ஈர்த்து வரும் 'சீன்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Prosathish