கானா பாலா குரலில் சீன் பட அடி ஏரோபிளேன் பாடல் வெளியீடு: துள்ளலான இசையில் அசத்திய சுஷின் ஷ்யாம்!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்திலிருந்து அடி ஏரோபிளேன் என்ற துள்ளலான பாடல் யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கானா பாலாவின் தனித்துவமான குரலில் உருவாகியுள்ள இந்த காதல் கானா பாடல் சமூக வலைதளங்களில் உடனடி வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு ராஜ்பிரியன் வரிகள் எழுதியிருக்க, மலையாளத்தின் முன்னணி இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் தாளம்போட வைக்கும் துள்ளலான இசையை அமைத்துள்ளார். நஸ்லேன் மற்றும் நஸ்ரியா ஃபஹத் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் காதல் மற்றும் கொண்டாட்டக் காட்சிகளுக்கு இப்பாடல் புதிய எனர்ஜியை சேர்த்துள்ளது. தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது.
· Actor Kayal Devaraj