புக்மைஷோவில் 25 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவு: வசூலில் அதிரடி காட்டும் 'சீன்' திரைப்படம்!

புக்மைஷோவில் 25 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவு: வசூலில் அதிரடி காட்டும் 'சீன்' திரைப்படம்!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'சீன்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது புக்மைஷோ தளத்தில் மட்டுமே இந்தத் திரைப்படம் 25 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவுகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக திரைப்பட மக்கள் தொடர்பாளர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வரும் இத்திரைப்படம், நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான திரைக்கதையால் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவெடுத்துள்ள 'சீன்', வார இறுதி நாட்களைத் தாண்டியும் வேலை நாட்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

· Prosathish

பழைய செய்திகள்