நஸ்லேன் நஸ்ரியா நடித்த சீன் திரைப்படத்தின் டிஎஸ்பி இன்பராஜ் பார்வை வீடியோ 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தின் 'டிஎஸ்பி இன்பராஜ்' க்ளிம்ப்ஸ் வீடியோ யூடியூபில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக மக்கள் தொடர்பாளர் சதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'ஆவேஷம்' பட புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் இளம் நட்சத்திரம் நஸ்லேன் மற்றும் நஸ்ரியா ஃபஹத் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாமின் அதிரடி பின்னணி இசையும், கலகலப்பான காட்சிகளும் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை இணையத்தில் பெரிய அளவில் வைரலாக்கியுள்ளது. குறிப்பாக கதாபாத்திரங்களின் தனித்துவமான உடல்மொழி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் ஒரு பக்கா என்டர்டெய்னராக 'சீன்' அமையும் என்பதால் சினிமா ஆர்வலர்கள் இப்படத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
· Prosathish