சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘சீன்’: கானா பாலா பாடிய ‘ஏரோப்ளேன்’ பாடல் வெளியீடு!

சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘சீன்’: கானா பாலா பாடிய ‘ஏரோப்ளேன்’ பாடல் வெளியீடு!

ஜீத்து மாதவன் இயக்கத்தில் நஸ்லன் மற்றும் நஸ்ரியா ஃபஹத் நடித்துள்ள ‘சீன்’ (SCENE) திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏரோப்ளேன்’ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் இந்த புதிய பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ‘ஏரோப்ளேன்’ பாடலை ராஜ்பிரியன் எழுத, கானா பாலா தனது துள்ளலான குரலில் பாடி அசத்தியுள்ளார். இளைஞர்களைக் கவரும் வகையிலான துள்ளலான நடன மெட்டுக்களுடன் இப்பாடல் உருவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான முதல் பாடல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கானா பாலாவின் இந்த கானா வைப் பாடல் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்து வருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 அன்று ‘சீன்’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜீத்து மாதவனின் கலகலப்பான திரைக்கதை மற்றும் சிறந்த நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான ஆர்வம் சினிமா விரும்பிகளிடம் அதிகமாக உள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்