தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் சீன் திரைப்படம்
ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வரும் 'சீன்' திரைப்படம் தமிழகம் முழுவதும் 460 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், சுமார் 700 க்கும் அதிகமான திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என விநியோகஸ்தர்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வெளியீடாக திரைக்கு களமிறங்கும் இப்படத்திற்கு தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மிக பலத்த திரையரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நாளுக்கான முன்பதிவுகள் மிக விறுவிறுப்பான வேகத்தில் நடைபெற்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் சினிமா பிரியர்களை ஈர்க்கும் வகையில் இத்தனை பெரிய எண்ணிக்கையிலான திரைகளில் படம் திரையிடப்படுவது படக்குழுவினருக்கு மிகப்பெரிய வர்த்தக பலமாக அமைந்துள்ளது. வசூல் ரீதியாகவும் படம் நல்ல தொடக்கத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil