சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் இணையும் சீமான்: ஆர்.கே.எஃப்.ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்கும் வரலாற்றுப் பிரம்மாண்ட திரைப்படம் 'சேயோன்'. சிவக்குமார் முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான செந்தமிழன் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் மரபையும் வீரத்தையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தில் சீமானின் நடிப்பு படத்திற்கு கூடுதல் கம்பீரத்தையும் அழுத்தமான உணர்வையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பாக்யஸ்ரீ போர்சே, ராஜ் பி ஷெட்டி, அருள்தாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வரலாற்று இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனின் தயாரிப்பில் சீமான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பது தமிழ் சினிமா மற்றும் கலை வட்டாரங்களில் மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சீமான் மீண்டும் ஒரு முழுநீள திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
· Rkfi