சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் இணைகிறார் சீமான்: மதுரையில் தீவிர படப்பிடிப்பு!
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'சேயோன்' படத்தில் இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் தலைவர் செந்தமிழன் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு தீவிரமாக நடித்து வருகிறார். சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் சீமான் இணைந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானதும் சினிமா ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் படத்தின் மீதான ஆவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்கள் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்து வருகின்றனர். கிராமத்துப் பின்னணியில் வீரம் செறிந்த கதைக்களமாக இது உருவாகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மதுரை படப்பிடிப்பு காட்சிகள் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த கட்டப் படப்பிடிப்புகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Idiamondbabu