யுவன் சங்கர் ராஜா இசையில் கௌதம் கார்த்திக்: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'செங்குளம்' டைட்டில் லுக்!

யுவன் சங்கர் ராஜா இசையில் கௌதம் கார்த்திக்: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'செங்குளம்' டைட்டில் லுக்!

கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ஐந்தாவது புதிய திரைப்படத்தின் தலைப்பு 'செங்குளம்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ள டைட்டில் போஸ்டர் உறுதி செய்துள்ளது. "ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கதை உண்டு, ஒவ்வொரு கதைக்கும் ஒரு பெயர் உண்டு" என்ற அழுத்தமான வாசகத்துடன் இந்த டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கிராமத்துப் பின்னணியில் அல்லது வரலாற்று நயத்துடன் கூடிய தீவிரமான களத்தில் இப்படம் உருவாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கணித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் கார்த்திக், யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்திருப்பது திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் இயக்குனர், கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· @xpresscinema

பழைய செய்திகள்