நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்: 7 ஆண்டுகளைக் கொண்டாடும் பிகில் ரசிகர்கள்!
தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த பிகில் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சினிமா எக்ஸ்பிரஸ் தளத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தின் புகழ்பெற்ற வசனத்தைப் பகிர்ந்து இந்நாளை சிறப்பித்துள்ளதை அடுத்து, தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிகில் கொண்டாட்டத்தைத் தெறிக்கவிட்டு வருகின்றனர். மைக்கேல் மற்றும் ராயப்பன் என்ற இரட்டை வேடங்களில் விஜய் வெளிப்படுத்திய அனல் பறக்கும் நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான கதைக்களம், நயன்தாராவின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் சிங்கப்பெண்ணே உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் படத்தை மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அந்தஸ்திற்கு உயர்த்தின. தீபாவளி பண்டிகைக்கு வெளியான பிகில் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வசூல் ஈட்டிய படங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது. ராயப்பனின் ஸ்டைல் மற்றும் வெறித்தனம் வசனங்கள் இன்றும் சினிமா ரசிகர்களின் நாடி நரம்புகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், 7 ஆண்டுகளைக் கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
· @xpresscinema