'கொலைகாரன் அல்ல... காதலன்': ஷாருக்கானின் மெகா பட்ஜெட் அதிரடிப் படம் 'கிங்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கிங்' திரைப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என்று பென் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "காத்தில் நஹி... ஆஷிக் ஹை" (கொலைகாரன் அல்ல, காதலன்) என்ற மாஸ் பஞ்ச் வாசகத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுஜோய் கோஷ் இயக்கத்தில் சித்தார்த் ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுஹானா கான் மற்றும் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சர்வதேச அளவிலான அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தாதா உலகப் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு உலகளவில் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'பதான்', 'ஜவான்' படங்களின் மெகா பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கான் புதிய தோற்றத்தில் களமிறங்கும் 'கிங்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டு வருகிறது. 2026 ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் கொண்டாட்டமாக இப்படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
· Penmovies