கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் ஷாருக்கானின் 'கிங்': அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் ஷாருக்கானின் 'கிங்': அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமான 'கிங்' வரும் 2026 டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட பிஆர்ஓ வம்சி ஷேகர் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். சித்தார்த் ஆனந்த் தயாரிப்பில் சுஜாய் கோஷ் இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அவரது மகள் சுஹானா கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிரட்டலான சண்டைக்காட்சிகள் மற்றும் மாஸ் திருப்பங்களுடன் இப்படம் திட்டமிடப்பட்டுள்ளது. 'பதான்', 'ஜவான்' படங்களின் மெகா வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கானின் புதிய படம் என்பதால் உலகளவில் இதற்கு அசுர எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 2026 டிசம்பர் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் தொடக்க பணிகள் மற்றும் கூடுதல் நட்சத்திரங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் காத்துள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்