ஷேன் நிகாமின் 28வது திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: கிரிக்கெட் பின்னணியில் புதிய படம்!
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகனாக வலம் வரும் ஷேன் நிகாமின் 28வது திரைப்படமான '#Shane28' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் முன்னோட்ட வீடியோ யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெகன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் விறுவிறுப்பான கதையம்சத்துடன் உருவாகிறது. இளைஞர்களின் விளையாட்டு ஆர்வம், அவர்களின் நட்பு, உள்ளூர் போட்டிகளில் சந்திக்கும் சவால்கள் மற்றும் வெற்றித் தோல்விகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகிறது. மாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பாக இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த முழு விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன. தமிழ் மற்றும் மலையாள இருமொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஷேன் நிகாமின் இந்தப் புதிய அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
· Prosathish