33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன்: டிசம்பர் 11-ல் 4கே அல்ட்ரா எச்டி மறுவெளியீடு!

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன்: டிசம்பர் 11-ல் 4கே அல்ட்ரா எச்டி மறுவெளியீடு!

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்தின் அடையாளமாகத் திகழும் இயக்குநர் ஷங்கரின் முதல் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான 'ஜென்டில்மேன்', 33 ஆண்டுகளுக்குப் பிறகு 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) தரத்தில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். மெகா தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மதுபாலா நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இப்படத்தின் பாடல்களும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இன்றும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், பிரமிக்க வைக்கும் 4கே டிஜிட்டல் வடிவம் மற்றும் துல்லியமான ஒலி அமைப்புடன் கிரேஸ் ஃபிலிம் மீடியா நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்கிறது. வரும் டிசம்பர் 11 ஆம் தேதி 'ஜென்டில்மேன்' திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. 33 ஆண்டுகால சினிமா மேஜிக்கை இன்றைய நவீன திரையரங்குகளில் மீண்டும் கண்டுகளிக்க அர்ஜுன், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஷங்கர் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்