டிசம்பர் 11-ல் 4K டால்பி அட்மாஸ் தரத்தில் 'ஜென்டில்மேன்' மறுவெளியீடு: ரசிகர்களுக்குத் தீபாவளி சர்ப்ரைஸ்!

டிசம்பர் 11-ல் 4K டால்பி அட்மாஸ் தரத்தில் 'ஜென்டில்மேன்' மறுவெளியீடு: ரசிகர்களுக்குத் தீபாவளி சர்ப்ரைஸ்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் அறிமுகப் படமான 'ஜென்டில்மேன்' திரைப்படம், அதிநவீன 4K டால்பி அட்மாஸ் தரத்தில் வரும் டிசம்பர் 11 அன்று உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. இத்தகவலை நடிகர் கயல் தேவராஜ் தீபாவளி வாழ்த்துப் போஸ்டருடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜுன், மதுபாலா மற்றும் கவுண்டமணி நடிப்பில் வெளியான இப்படம் தமிழ் சினிமாவின் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாகும். ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத சூப்பர்ஹிட் பாடல்களும் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளும் நவீன டால்பி அட்மாஸ் ஒலித் தரத்தில் திரையரங்குகளில் மீண்டும் ஒலிக்கவுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையவுள்ளது. தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனின் தயாரிப்பில் வெளியான இப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தொழில்நுட்பத் தரத்தில் திரைக்கு வரும் இந்த கல்ட் கிளாசிக் திரைப்படத்தை, வரும் டிசம்பர் 11 அன்று திரையரங்குகளில் கண்டு களிக்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்