வெளியானது வானவேடிக்கை திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர்: சண்முக பாண்டியன் கம்பீர நடிப்பு
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள 'வானவேடிக்கை' திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த தகவலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரபல இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணைந்து நடிகர் கயல் தேவராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எல்.கே.சுதீஷ் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். கிராமத்துப் பின்னணியில் அனல் பறக்கும் ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளுடன் டிரெய்லர் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தந்தையைப் போலவே சண்முக பாண்டியனின் கம்பீரமான நடை மற்றும் சண்டை காட்சிகள் கேப்டன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. படத்தின் திரையரங்கு ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
· Actor Kayal Devaraj