அமல் நீரத்தின் 'பேச்சிலர் பார்ட்டி 2': 'குரு'வாக களமிறங்கும் ஷைன் டாம் சாக்கோ!
இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேச்சிலர் பார்ட்டி DEUX' திரைப்படத்தின் புதிய கதாபாத்திர போஸ்டரை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ 'குரு' என்ற அதிரடி கதாபாத்திரத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட மல்டிஸ்டாரர் படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், ஷரபுதீன், ஸ்ரீநாத் பாசி, நதியா, ஜோதிர்மயி, ரஜிஷா விஜயன் என பெரும் நட்சத்திர பட்டாளமே களம் காண்கிறது. உன்னி ஆர் கதையெழுதும் இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். 2012-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பேச்சிலர் பார்ட்டி' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த இரண்டாம் பாகத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியுள்ளது. கதாபாத்திரங்களின் புதிய தோற்றங்கள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன.
· Sony Music South