சிவராஜ்குமாரின் 'பிகாசோ' பட ஆடியோ உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்!
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பிகாசோ' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் இந்தியா கைப்பற்றியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தை கௌதம் சிவராம் எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, பாலா அருணாச்சலாவின் டிராமா கம்பெனி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிவாணி நகரம், யோக லக்ஷ்மி, கானா வினோத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை எஸ்.கே கவனிக்கிறார். சிவராஜ்குமாரின் அதிரடி தோற்றமும் வித்தியாசமான கதைக்களமும் கொண்ட 'பிகாசோ' படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. லியோன் ஜேம்ஸின் மெல்லிசை மற்றும் அதிரடி பாடல்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· Actor Kayal Devaraj