ரஜினி சாருடன் இருப்பது அலாதியான மகிழ்ச்சி: நெகிழ்ச்சியுடன் பேசிய சிவராஜ்குமார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இருக்கும் தருணங்கள் எப்போதுமே தூய மகிழ்ச்சியைத் தருபவை என்றும், அப்பா கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பற்றிய அவரது நினைவுகள் மிகச் சிறப்பானவை என்றும் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார் நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் தளத்தில் வெளியான இப்பேட்டியில், 'ஜெயிலர் 2' படம் பற்றியும் ரஜினியுடனான தனது ஆழமான அன்பான நட்பைப் பற்றியும் சிவண்ணா மனம் திறந்து பேசியுள்ளார். முதல் பாகத்தில் அவர் திரையில் தோன்றிய சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த திரையரங்கையும் அதிரவைத்த நரசிம்மா கதாபாத்திரம், இரண்டாம் பாகத்திலும் மாஸாகத் தொடரும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தகட்டப் பணிகள் குறித்து சினிமா ரசிகர்கள் உலகமெங்கும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
· @xpresscinema