ஈ நகரானிகி ஏமைந்தி 2 படத்தில் கீர்த்தனாவாக களமிறங்கும் சிவாத்மிகா ராஜசேகர்: நவம்பர் 19-ல் ரிலீஸ்!
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவைத் திரைப்படமான 'ஈ நகரானிகி ஏமைந்தி' படத்தின் இரண்டாம் பாகமான 'இ.என்.இ ரிப்பீட்' (ENE Repeat) படத்தில், கீர்த்தனா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சிவாத்மிகா ராஜசேகர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பி.ஆர்.ஓ வம்சி சேகர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் தருண் பாஸ்கரின் முதல் பாகம் ஏற்படுத்திய நகைச்சுவை அலையைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகத்திலும் கலகலப்பான பயணக் கதைக் களமும் இளைஞர்களின் நட்பும் மையமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவாத்மிகாவின் துடிப்பான கதாநாயகி பாத்திரம் படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறுபட்ட தோற்றத்தில் அவர் திரையில் தோன்றவிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வருகிற நவம்பர் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரவுள்ளன.
· Ursvamsishekar