'ஆகாயம்லோ ஒக தாரா' படத்தில் ரோஹினியாக ஸ்ருதி ஹாசன்: நவம்பர் 20-ல் துல்கர் சல்மானுடன் திரைக்கு வரும் மேஜிக்!
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள 'ஆகாயம்லோ ஒக தாரா' (AOT) திரைப்படத்தில், ரோஹினி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக நினைவூட்டியுள்ளது. இன்னும் 9 நாட்களில் திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திர போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் சாதினேனி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா மற்றும் துல்கரின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் அழகிய காதலையும் லட்சியக் கனவுகளையும் மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் ஸ்ருதி ஹாசன் முதன்முறையாக இணைந்துள்ளதால், திரையில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் கவரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களின் பெரும் ஆவலுக்கு மத்தியில் 'ஆகாயம்லோ ஒக தாரா' திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. பாடல்களும் டீசரும் ஏற்கனவே இணையத்தில் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
· Actor Kayal Devaraj