சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்': ஃபேன்டஸி ஹாரர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' (DRONES) என்ற ஃபேன்டஸி ஹாரர் திரைப்படத்தின் விறுவிறுப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு புகழ் சித்தி இத்னானி முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, மொகமத் குரைஷி, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கற்பனை உலகமும் மாயாஜாலமும் கலந்த ஒரு புதிய சாகசக் களத்தில் திகில் மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல படத்தொகுப்பாளர் ரூபன் படத்தொகுப்பு செய்ய, ஹரி இசையமைத்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்தோடு ரசிக்கும் வகையிலான ஒரு புதிய திரை அனுபவமாக 'ட்ரோன்ஸ்' படம் திரைக்கு வரவுள்ளதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் இதன் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
· Idiamondbabu