சித்து ஜொன்னலகட்டாவின் 10வது படம்: சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பூஜை தொடக்கம்!
தெலுங்கு சினிமாவின் துடிப்பான நாயகன் 'ஸ்டார் பாய்' சித்து ஜொன்னலகட்டா நடிக்கும் பத்தாவது திரைப்படமான 'சித்து 10' அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் பன்னி வாஸ் ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா பூஜை நவம்பர் 11ஆம் தேதி காலை 9:32 மணிக்கு நடைபெறுகிறது. இப்படத்தை இயக்குநர் அசோக் பந்த்ரெட்டி இயக்குகிறார். தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் இளைஞர்களை கட்டிப்போட்ட சித்து ஜொன்னலகட்டா, இப்படத்திலும் ஒரு வித்யாசமான மற்றும் உற்சாகமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பிரபல இயக்குநர் சுகுமாரின் எழுத்து நிறுவன தயாரிப்பு என்பதால் கதை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரமாண்ட பூஜை விழாவுடன் தொடங்கும் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பணிகள் விரைவில் முழுவீச்சில் நடைபெறவுள்ளன. படத்தில் நடிக்கும் முன்னணி கதாநாயகி மற்றும் பிற முக்கிய நடிகர், நடிகைகள் யார் என்பது பற்றிய சுவாரசியமான விவரங்களை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
· Ursvamsishekar