சித்து ஜொன்னலகட்டாவின் 10-வது படம்: பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கியது புதிய காதல் பயணம்!

சித்து ஜொன்னலகட்டாவின் 10-வது படம்: பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கியது புதிய காதல் பயணம்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரமான சித்து ஜொன்னலகட்டா நடிக்கும் பத்தாவது படத்தின் துவக்க விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்ட பூஜையுடன் நடைபெற்றதாகத் தயாரிப்பு வட்டாரங்கள் எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளன. டிஜே தில்லு மற்றும் தில்லு ஸ்கொயர் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் இளைஞர்களைக் கவர்ந்த சித்து, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு அழுத்தமான காதல் கதையில் நடிக்கவுள்ளார். நகைச்சுவை மற்றும் காதல் கலந்த உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் இப்படம் தயாராகிறது. முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் திறமையான நடிகர்களும் இணையும் இப்படத்தின் திரைக்கதை புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பூஜையைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம் இளைஞர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மீண்டும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அடுத்தடுத்து வரவிருக்கும் அப்டேட்டுகளை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்