சந்தீப் கிஷன் நடித்த 'சிக்மா' திரைப்படத்தின் 'அய்யயோ அம்மாடி' வீடியோ பாடல் வெளியீடு!

சந்தீப் கிஷன் நடித்த 'சிக்மா' திரைப்படத்தின் 'அய்யயோ அம்மாடி' வீடியோ பாடல் வெளியீடு!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா இணைந்து நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தின் புதிய காதல் வீடியோ பாடலான 'அய்யயோ அம்மாடி' தற்போது அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் இந்த மெலடி பாடல் குறித்த வீடியோ இணைப்பை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகியுள்ள இந்த இனிமையான மெலடி பாடல், திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. தற்போது தெலுங்கில் 'ஒலம்மோ வகலாடி' என்ற பெயரிலும், தமிழில் 'அய்யயோ அம்மாடி' என்ற பெயரிலும் இந்த வீடியோ பாடல் வெளிவந்து இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சுபாஸ்கரன் வழங்க, ஜேஎஸ்ஜே இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் தற்போது வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் ரொமான்டிக் காட்சிகளுடன் கூடிய இந்த வீடியோ பாடல், இணையத்தில் பாடல் பிரியர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

· Lyca Productions

பழைய செய்திகள்